டில்லியில் இன்று காவிரி நீர் குழு கூட்டம்

டில்லியில் இன்று காவிரி நீர் குழு கூட்டம்
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம் இன்று டில்லியில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடத்தப்படுகிறது. தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவினர், மாதந்தோறும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
kaveri

தற்போது, டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ சாகுபடி காலம் துவங்கியுள்ளது.எனவே, கர்நாடகாவில் இருந்து, காவிரி நீரை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், இன்று டில்லியில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடக்கிறது. மத்திய நீர்வளஆணைய தலைமை பொறியாளரும், குழுவின் தலைவருமான நவீன் தலைமையில், இக்கூட்டம் நடக்கவுள்ளது

தமிழகம் தரப்பில், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம், திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். நடப்பு பருவத்தில், 6ம் தேதி வரை, 126.5 டி.எம்.சி., நீரை, கர்நாடகா வழங்கியுள்ளது.

இதில், 0.51 டி.எம்.சி., மட்டுமே நிலுவையில் உள்ளது.எனவே, வரும் மாதங்களுக்கான நீரை முறைப்படி திறக்க, இக்கூட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.மேகதாது அணை கட்டுமானம் தொடர்பான விவாதம் கூடாது எனவும், தமிழக பிரதிநிதிகள் தரப்பில் வலியுறுத்தப்பட உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *