தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சரானார் நிதிஷ்.. முக்கிய பதவிகளை கைப்பற்றிய பாஜக

தொடர்ந்து 4வது முறையாக பீகார்  முதலமைச்சரானார் நிதிஷ்.. முக்கிய பதவிகளை கைப்பற்றிய பாஜக

பீகார் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார், தொடர்ந்து 4ஆவது முறையாக பதவியேற்றார்.

பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடந்து முடிந்த மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து, நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை மாநில ஆளுநரிடம் நேற்று வழங்கினார்.

இதையடுத்து, இன்று பாட்னாவில் உள்ள மாநில ஆளுநர் இல்லத்தில் ஆளுநர் பகு சவுகான் முன்னிலையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது69 வயதாகும் நிதிஷ் குமார், தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்றார். இதன்மூலம், 7வது முறையாக அவர் பீகார் மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.

அவரைத்தொடர்ந்து, பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் தார்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றனர். இறுதியாக மாநில அமைச்சர்களாக, அஷோக் சவுத்ரி, விஜய் சவுத்ரி, மேவா லால் சவுத்ரி, விஜேந்திர பிரசாத் யாதவ் உள்ளிட்டோரும் பதவியேற்றுக் கொண்டனர். அதே வேளையில், பிகார் சட்டப்பேரவையின் அவைத் தலைவர் பதவியையும் பாஜக கைப்பற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *