பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் இனி தனியார்மயமே..மோடி தீட்டிய அடுத்த திட்டம்

பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் இனி தனியார்மயமே..மோடி தீட்டிய அடுத்த திட்டம்

இந்தியாவில் 4 முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்தும் தனியார்மயம் ஆக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி :

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் பேசினார். அப்பொழுது பேசிய அவர், தொழில் முயற்சிகளுக்கும், வணிகங்களுக்கும் ஆதரவு அளிப்பது மத்திய அரசின் கடமை. ஆனால் அனைத்து தொழில்களையும் அரசே நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

வணிகம் செய்வது அரசின் வேலை அல்ல. அதனால் தான் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் விற்கப்பட்டு நவீனப்படுத்தப்பட இருக்கிறது. நிறைய பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அவற்றுக்கு மக்களின் வரிப்பணத்தை செலவிட வேண்டி இருக்கிறது. எனவே தான் அரசு தனியார்மயம் குறித்து இந்த முடிவை எடுத்துள்ளது.

Read more – இன்றைய ராசிபலன் 25.02.2021!!!

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த 4 துறைகளை சேர்ந்த குறைந்தபட்ச பொதுத்துறை நிறுவனங்களை தவிர, மற்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்க அரசு உறுதி எடுத்துள்ளது. நாட்டில் குறைவாக பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்தப்படாத சொத்துகள் அதிகம் உள்ளது. அத்தகைய 100 விதமான சொத்துகளை விற்று ரூ.2½ லட்சம் கோடி திரட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *