இளம்பெண் வன்கொடுமை; ஹத்ராஸ் பகுதிக்கு மீண்டும் செல்லும் எம்.பி.ராகுல்காந்தி

இளம்பெண் வன்கொடுமை; ஹத்ராஸ் பகுதிக்கு மீண்டும் செல்லும் எம்.பி.ராகுல்காந்தி

உ.பி., ஹத்ராஸ் பகுதிக்கு மீண்டும் செல்கிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி.

உ.பி., ஹத்ராஸ் பகுதிக்கு மீண்டும் செல்கிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி.

சமீபத்தில்  உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை சில பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தை அடுத்து, ஹத்ராஸ் பகுதிக்  காவல்துறையினர் இளம்பெண்ணின் சடலத்தை பெற்றோரிடம் கொடுக்காமல் எரித்தனர்.

போலீஸார் எதற்காக பெண்ணின் சடலத்தை எரித்தனர் என்ற கேள்வி எழுந்தநிலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சில உத்தரவுகளை நேற்றுப் பிறப்பித்தார்.

இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தச் செயலைக் கண்டித்துக் குரல் கொடுத்தனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,அவரது சகோதரி பிரியங்கா காந்தியுடன் ஹத்ராஸ் பகுதிக்குச் செல்ல முயன்றார். ஆனால் போலீஸார் ராகுல் மற்றும் பிரியங்காவை தடுத்து நிறுத்தினார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் போலீஸார் ராகுலை கீழே தள்ளினர்.

இதில், ராகுல்காந்தி காயமடைந்தார்.இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கல் எழுந்தது. அதே சமயம்  ராகுல் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ராகுல்காந்தி இன்று மீண்டும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *