துபாய் சேவைக்கு விதிக்கப்பட்ட 15 நாள் தடை நீங்கியது:வழக்கம் போல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயங்கும்

துபாய் சேவைக்கு விதிக்கப்பட்ட 15 நாள் தடை நீங்கியது:வழக்கம் போல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயங்கும்
துபாய் விமான சேவை வழக்கம்போல் இயங்கும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் இருந்து துபாய்க்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னரே அழைத்து வர வேண்டும் என்று துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்து இருந்தது.எனவே கடந்த 15 ம் தேதி முதல் துபாய்க்கு விமான சேவை துவங்கியது.

இந்த நிலையில், இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் பயணிகள் இரண்டு விமானங்களில் சென்ற போது , இரண்டு பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் ஏர்இந்தியா அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்குதவற்கு 15 நாட்கள் தடை விதித்து அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது.

மேலும் சார்ஜாவில் இருந்து மாற்று விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று மாலையே இந்த முடிவு மாற்றப்பட்டது. இதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இன்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் விமானங்கள் வழக்கம்போல் துபாய், இந்தியா இடையே இயக்கப்படும் என அறிவித்துள்ளது. சார்ஜாவில் மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *