அதிமுக இன்றளவும் ஒற்றுமையாக தான் இருக்கின்றது – அமைச்சர் உதயகுமார்…

அதிமுக இன்றளவும் ஒற்றுமையாக தான் இருக்கின்றது – அமைச்சர் உதயகுமார்…
அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது என்றும் ஆரோக்கிய நிலையை உருவாக்கவே ஆலோசனை நடந்தது என்றும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறினார்.

தமிழகத்தில் இன்னும் ஒரு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி தேர்தல் ஆயத்த பணிகளில் அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தைகளும் ஒருபக்கம் சத்தமில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் கொரோனா காலத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

பரபரப்பான இந்த அரசியல் காலகட்டத்தில் அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் அதிமுகவின் அணைத்து தலைவர்களும் கலந்துகொண்டனர். அ.தி.மு.க.வில் யார் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பது தொடர்பாக நிர்வாகிகளிடையே எழுந்த காரசார விவாதங்களையடுத்து, உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தின் முடிவில் கட்சியின் செயற்குழு கூட்டத்தை வருகிற 28-ந் தேதி கூட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர். அவரை அப்போது கூறுகையில் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ராமர்-லட்சுமணன் போல ஒற்றுமையாக உள்ளனர்.

முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது என அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைக்கும் கூட்டணியால் எதிர்க்கட்சிகள் திக்குமுக்காடிபோகும் என தெரிவித்துள்ளார்.

வருவதை நாம் பொறுத்திருந்து பாப்போம்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *