சர்வதேச யோகா தினம் 2025-க்கான 25 நாள் கவுன்ட்-டவுன் தொடங்கியது

சர்வதேச யோகா தினம் 2025-க்கான 25 நாள் கவுன்ட்-டவுன் தொடங்கியது

சர்வதேச யோகா தினம் 2025-க்கான 25 நாள் கவுன்ட் டவுன் நிகழ்வை 2025 மே 27 அன்று புதுச்சேரியில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ் தொடங்கிவைத்தார். 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ் நாதன், முதலமைச்சர், என்.ரங்கசாமி ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். கலாச்சார பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற புதுச்சேரி, சர்வதேச யோகா தினம் 2025-க்கான 25 நாள் கவுன்ட் டவுன் நிகழ்வை குறிக்கும் வகையில் 6,000 யோகா ஆர்வலர்கள் அலை அலையாகத் திரண்டிருந்தனர். ஆயுஷ் அமைச்சகத்தின் மொர்ராஜி தேசாய் தேசிய யோகா கல்விக்கழகத்தால் காந்தி திடலில் துடிப்புமிக்க யோகா மஹோத்சவ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்வில் சர்வதேச யோகா தினம் 2025-க்கான 25 நாள் கவுன்ட்-டவுன் தொடங்கியது ஆயுஷ் அமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ், மகரிஷி அரவிந்தரின் பணியிடமான புதுச்சேரி, பன்முகத்தன்மைக்கிடையே இந்திய கலாச்சாரத்தின் நித்திய மரபுகளை பாதுகாப்பதற்கு வாழும் உதாரணமாக விளங்குகிறது என்றார்.

யோகாவின் மாற்றத்திற்கான சக்தி மற்றும் உடல், மன நலத்தை மேம்படுத்தும் அதன் பொருத்தப்பாடு பற்றி அவர் எடுத்துரைத்தார். யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல. உடலையும், உள்ளத்தையும் தொடர்புபடுத்தும் தொன்மையான ஆரோக்கிய வாழ்க்கை முறையாகும். யோகா பயிற்சி செய்வோர் அமைதி, ஆற்றல், தெளிவு ஆகியவற்றை கொண்டிருப்பார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

உலக அளவில் யோகா  ஏற்றுக்கொள்ளப்பட்டது நமது ஆற்றல்மிகு பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஓய்வில்லா முயற்சிக்கு  உதாரணமாகும் என்று குறிப்பிட்ட அமைச்சர்  அவரது தொலைநோக்குப் பார்வையால் நமது யோகா பாரம்பரியம் ஒட்டுமொத்த உலகத்திற்கும்  உந்துசக்தியாக  உள்ளது என்றார்.  இந்த ஆண்டு யோகா தினத்தின்  மையப்பொருளாக நமது பிரதமரால் தெரிவு செய்யப்பட்டுள்ள “ஒரே பூமி, ஒரே சுகாதாரத்திற்கான யோகா” என்பது  ஆரோக்கியமான பூமி, ஆரோக்கியமான மனிதகுலம் என்ற நமது  கூட்டான விருப்பத்தை வெளிப்படுத்துகிறது என பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்தார். யோகா என்பது தற்காலத்தின் முக்கிய தேவையாகவும்  ஆரோக்கியமான நமது எதிர்காலத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க புதுச்சேரியிலிருந்து பகிர்ந்து கொள்ள நாம் விரும்பும் செய்தி இதுதான் என்று அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *