உதவி செய்தி ஆசிரியர், வீடியோ எடிட்டர் உள்ளிட்ட பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
நிறுவனம் : ப்ரஸார் பாரதி (Prasar Bharati)
பணியிடம்: சண்டிகர்
பதவி:
- உதவி செய்தி ஆசிரியர் (Asst. News Editor)
- வீடியோ எடிட்டர் (Video Editor)
- தயாரிப்பு உதவியாளர் (Post Production Assistant)
- உதவி வலைத்தள ஆசிரியர் (Assistant Website Editor)
- ஸ்டெனோகிராபர் (Stenographer)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.11.2020
வயது வரம்பு :
- உதவி செய்தி ஆசிரியர் மற்றும் தயாரிப்பு உதவியாளருக்கு 25 முதல் 50 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- வீடியோ எடிட்டர், உதவி வலைத்தள ஆசிரியர், ஸ்டெனோகிராபருக்கு 21 முதல் 50 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது பத்திரிகை பிரிவில் டிப்ளோமா அல்லது திரைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் டிப்ளோமா அல்லது 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://prasarbharati.gov.in/vacancies/Casual_297881.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Regional Head of News, Regional News Unit, Doordarshan Kendra, Sector – 37 – B, Near Batra Cinema, Chandigarh – 160036.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள http://prasarbharati.gov.in/vacancies/Casual_297881.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்தி அலையின் வாழ்த்துக்கள்!!