அரசு ஆவின் நிறுவனத்தில் ஓட்டுநர் பணி.. 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது

அரசு ஆவின் நிறுவனத்தில் ஓட்டுநர் பணி.. 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (ஆவின்)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

பணி : ஓட்டுநர்

பணியிடம் : காஞ்சிபுரம், திருவள்ளூர்

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்று ஓட்டுநர் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

30 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்

ஊதியம் : மாதம் ரூ.19,500

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 27.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, K.T.D.C.M.P.Union Ltd., 55, Guruvappa Street, Ayanavaram, Chennai – 600 023

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.250
எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100

பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *