மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலை

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலை

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களை கண்காணிக்கும் முறை — Vikaspedia

பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர் , உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் பயன்பெற பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பங்குபெற விருப்பமுள்ள தொழில்முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு உதவிபுரிந்திட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இவர்கள், குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், அதற்கான வங்கிகடன் பெற்றிட உதவுதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். திட்டவிதிமுறைகளின் படி கடன் ஒப்புதல் பெறப்பட்டதும் ₹10ஆயிரம் முதல் தவணையாகவும், வணிக ரீதியான உற்பத்தி துவங்கப்பட்டதும் இரண்டாவது தவணையாக ₹10ஆயிரமும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பங்களை tn.pmfme@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்டு 16.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *