தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ்ஜில் இயக்குனராக பணிபுரிய விருப்பமா!!

தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ்ஜில் இயக்குனராக பணிபுரிய விருப்பமா!!
இயக்குனர் பதவிக்கான பணியிடத்தை நிரப்புவதற்கான ஆணையை, தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் (NIRDPR) வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.

மொத்தப் பணியிடங்கள் : 01

நிறுவனம் : தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் (National Institute of Rural Development and Panchayati Raj – NIRDPR)

வேலை இடம்: ஹைதராபாத்

பதவி மற்றும் காலியிடங்கள்: 

இயக்குனர் (நிர்வாகம் மற்றும் மனிதவளம்) (Director (Administration & HR)) – 01

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.08.2020

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://career.nirdpr.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து,சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : National Institute of Rural Development and Panchayati Raj, Rajendra Nagar, Hyderabad 500030.

கல்வித் தகுதி : புகழ்பெற்ற பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து சமூக அறிவியல் / சட்டம் / பணியாளர் நிர்வாகத்தில் முதுகலை பெற்றிருக்க வேண்டும்.

வேலை அனுபவம்: எந்தவொரு தேசிய அல்லது சர்வதேச முகவர் நிலையங்களிலும், அதில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் மனிதவள / நிர்வாக களத்தில் மேற்பார்வை நிலையில், தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 20 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள http://nirdpr.org.in/nird_docs/vacancies/jobs22052020.pdf அல்லது http://nirdpr.org.in/ என்ற இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *