நாளை TNPSC குரூப்-4 தேர்வு… சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துறை திட்டம்

நாளை TNPSC குரூப்-4 தேர்வு… சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துறை திட்டம்

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.

Bus strike in Tamil Nadu on May 15, services hit already | The News Minute

தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜூலை 24) குரூப்-4 தேர்வுகள் 7,689 மையங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 22,02,942 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, அனைத்து மையங்களிலும், கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும்படையினர், நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையை பொறுத்தவரை 503 மையங்களில் மொத்தம் 1,56,218 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

இந்த நிலையில், அந்தந்த ஆட்சியர்களின் அறிவுறுத்தலின்படி மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாளை சிறப்பு பேருந்துகளை இயக்கவும், தேர்வு மையங்கள் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் முறையாக நின்று செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *