ஊரக உள்ளாட்சி தேர்தலில் 6 வாக்குகள்… உடைந்து போவேன் என்று நினைக்க வேண்டாம்… எப்போதும்போல் எனது பொது சேவை தொடரும்!! வைரல் பிரசுரம்…

ஊரக உள்ளாட்சி தேர்தலில் 6 வாக்குகள்… உடைந்து போவேன் என்று நினைக்க வேண்டாம்… எப்போதும்போல் எனது பொது சேவை தொடரும்!! வைரல் பிரசுரம்…

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெறும் 6 வாக்குகளை மட்டும் பெற்று படுதோல்வியை சந்தித்த ஒருவர் அந்த ஊராட்சி மக்களுக்கு நன்றி தெரிவித்து துண்டுபிரசுரம் ஒன்றினை விநியோகித்து உள்ளார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது;

ஊரக உள்ளாட்சி தேர்தல் நன்றி தெரிவிக்கும் துண்டு பிரசுரம்.

எனது அன்பான பென்னலூர் ஊராட்சியின் ஒன்பதாவது வார்டு சொந்தங்களுக்கு எனது நன்றியை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தோல்வி அளித்ததற்கு நன்றி எதற்கு என்று கேட்கலாம், வாக்குகளில் என்னை தோற்கடித்து வாழ்க்கையில் ஜெயிக்க கற்றுக் கொடுத்து உள்ளீர்கள்.

25 சதவிகிதம் பந்தத்தின் பிடியில் ஓட்டு பிரிந்தது. 25 சதவிகிதம் பணத்தின் பிடியில் ஓட்டு பிரிந்தது. 25 சதவிகிதம் பாட்டிலின் பிடியில் ஓட்டு பிரிந்தது. 25 சதவிகிதம் நம்ப வைத்து பொய்யாக்கி ஓட்டு பிரிந்தது.

உங்கள் அனைவரையும் பற்றி புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி.

ஆறுதலுக்காக 6 ஓட்டு போட்ட அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

மொத்தத்தில் தோற்று ஜெயிதுள்ளேன்.

உடைந்து போவேன் என்று நினைக்க வேண்டாம். எப்போதும்போல் எனது பொது சேவை தொடரும் இப்படிக்கு ஓ.முத்து

என தெரிவித்துள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *