இன்ஜினியரிங் படிப்புக்கான ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைகழகம் இன்று மாலை வெளியிடப்பட்டது. தமிழக உயர்க்கல்வி அமைச்சர் அன்பழகன் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகள் பெயரை வெளியிட்டார்.
சஷ்மிதா என்ற மாணவி 199.67 கட்ஆஃப் மார்க் பெற்று முதல் இடம் பிடித்தார். நவநீத கிருஷ்ணன் என்ற மாணவன் 199.67 மார்க் பெற்று 2-வது இடம் பிடித்தார். 199.5 மார்க் பெற்று காவ்யா என்ற மாணவி 3-வது இடம் பிடித்தார்.
அக்டோபர் 1-ந்தேதி கலந்தாய்வு தொடங்கும் என்றும் 1-ந்தேதி முதல் 5-ம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
அக்டோபர் 8-ம் தேதி முதல் 27-ந்தேதி வரை நான்கு கட்டங்களாக பொது கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது