`விரைவில்…’ போஸ்டரை நிஜமாக்கிய கொலைக்கும்பல்- திருச்சியில் நிஜமாகிப் போன சர்ச்சை போஸ்டர்!

`விரைவில்…’ போஸ்டரை நிஜமாக்கிய கொலைக்கும்பல்- திருச்சியில் நிஜமாகிப் போன சர்ச்சை போஸ்டர்!

சின்ராஜின் கொலைக்கூட பழிக்கு பழி வாங்கும் விதமாக இன்னொரு கொலை நிச்சயமாக நடக்கும் என போலீஸாருக்கு முன்கூட்டியே தெரியும்.

செப்டம்பர் 15-ம் தேதி மாலை, திருச்சி பொன்மலைப்பட்டி டாஸ்மாக்கிலிருந்து மது வாங்கிவிட்டு வெளியே வந்த சின்ராஜ் என்ற 22 வயது இளைஞர் மர்மக் கும்பல் ஒன்றால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விசாரணையில், கொலையான சின்ராஜின் அண்ணன் சக்திவேலுக்கும், பொன்னேரிபுரம் பகுதியைச் சேர்ந்த ரெளடியான அலெக்ஸ் என்பவருக்கும் இடையே கடுமையான முன்பகை இருந்ததும் இதுவே கொலைக்கு காரணமாக அமைந்தது எனவும் தெரியவந்தது.

அதன் காரணமாக, சக்திவேலை கொலை செய்ய அலெக்ஸ் அவர் ஆதரவாளர்களுடன் திட்டம் தீட்டியிருக்கிறார். சம்பவத்தன்று சக்திவேலும், சின்ராஜூம் பொன்மலைப்பட்டி டாஸ்மாக்குக்கு மது வாங்க வந்திருக்கின்றனர். அதைத் தெரிந்துகொண்ட அலெக்‌ஸ் மற்றும் அவரது கும்பல், சக்திவேலைக் கொலை செய்வதாக நினைத்து மாஸ்க் போட்டிருந்ததால் அடையாளம் தெரியாமல் அவருடைய தம்பி சின்ராஜை வெட்டிச் சாய்த்தனர். இதில் அலெக்ஸ் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சின்ராஜின் இறப்பை தாங்க முடியாத அவருடைய நண்பர்கள், சின்ராஜின் இறப்புக்கு அடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் `மரணமடைந்த சின்ராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் 4 மணி அளவில் அவரின், இல்லத்திலிருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றதோடு, போஸ்டரில் ‘விரைவில்’ என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தனர். சின்ராஜின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கிலேயே இந்த ‘விரைவில்’ என்கின்ற வாசகத்தை அவர்கள் அச்சிட்டிருப்பதாக அப்போதே அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக போஸ்டர் அடித்த ஐந்து பேரை பொன்மலை போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். இதற்காக பழிக்கு பழி கொலை சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதால் போலீசார் எச்சரிக்கையாக இருந்தனர்

இந்த நிலையில், போஸ்டரில் குறிப்பிட்டிருந்ததைப் போலவே சின்ராஜின் இறப்புக்குப் பழிவாங்கும் வகையில், நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் பொன்மலைப்பட்டி மாவடிக்குளம் ஏ.கே.அவென்யூ பகுதியில் வைத்து சின்ராஜைக் கொலை செய்த அலெக்ஸின் தம்பி பெலிக்ஸை, 10 பேர் கொண்ட மர்மக் கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது. சின்ராஜைக் கொலை செய்த வழக்கில் அலெக்ஸ் திருச்சி மத்திய சிறையிலிருக்கும் நிலையில், அவரை வழிவாங்குவதற்காக அவர் தம்பி பெலிக்ஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் அப்பகுதியில் உண்டாக்கியிருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *