நாங்களும் கொரோனாவுக்கு மருந்து ரெடி பண்ணிட்டோம் அறிவித்த சீனா…

நாங்களும் கொரோனாவுக்கு மருந்து ரெடி பண்ணிட்டோம் அறிவித்த சீனா…
இன்றைக்கு உலக நாடுகளின் முக்கிய பேசுபொருள் கொரோனா தடுப்பூசி உலகையே முடக்கி போட்டுள்ள கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன.

பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுகொண்டு இருக்கின்றன. இப்படி சுமார் 165 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் ரஷ்யா கடந்த 11 ஆம் தேதி தாங்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும் அதை பதிவு செய்து விட்டதாகவும் கூறியது. ஆனால் ‘ஸ்புட்னிக்-5’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை கடக்கவில்லை எனவும், ரஷியா தடுப்பூசியில் அவசரம் காட்டுவதாகவும், உண்மை தகவல்களை வெளியிடுவதில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவல்களை ரஷியாவிடம் கேட்டுள்ளதாக WHO கூறியுள்ளது.

இந்த நிலையில் ரஷியாவுக்கு போட்டியாக சீனாவும் களத்தில் குதித்துள்ளது. அந்த வகையில் சீன அரசு மருந்து நிறுவனமான சினோபார்மும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்களது தடுப்பூசி விற்பனைக்கு தயாராக கிடைக்கும் என்று நேற்று அறிவித்துள்ளது இது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி அந்த நிறுவனத்தின் தலைவரான லியு ஜிங்ஜென் கூறியதாவது:-

எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி நடப்பாண்டு இறுதியில் விற்பனைக்கு வந்து விடும் என்றும். இந்த தடுப்பூசியின் விலை 140 டாலருக்கு குறைவாக அதாவது இந்திய மதிப்பில் (சுமார் ரூ.10,500) இருக்கும். இதை 2 ‘டோஸ்’ போட்டுக்கொள்ள வேண்டியது வரும் எனவும். முதல் ‘டோஸ்’ போட்டு கொண்டு 28 நாளுக்கு பின்னர் அடுத்த ‘டோஸ்’ போட வேண்டும். முக்கிய நகரங்களில் மாணவர்களும், தொழிலாளர்களும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமப்புறங்களில் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளத்தேவையில்லை கூறியுள்ளது.

Illustrative vial of coronavirus vaccine

மேலும் எங்கள் நிறுவனம், 2 தடுப்பூசிகளை தயாரித்து பரிசோதித்து வருகிறது என்றும், எங்கள் நிறுவனம், ஆண்டுக்கு 22 கோடி தடுப்பூசிகளை தயாரித்து வழங்கும் ஆற்றலை கொண்டுள்ளது. நானும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே சீன ஆராய்ச்சியாளர்களும், நிர்வாகிகளும் தற்போது பரிசோதனையில் உள்ள இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் அறிவியல் வட்டாரங்களில் நெறிமுறை சார்ந்த மேலும் கேள்விகளை இது எழுப்யுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *