சென்னையில் பரபரப்பு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு…

சென்னையில் பரபரப்பு வெளியே நிறுத்தி  வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு…
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் 155-வது பிளாக்கில் வசித்து வருபவர்கள் அருண்(வயது 27), எட்வர்ட் (37), அனிதா(30) மற்றும் கோபி(23) ஆகியோர் தங்களுடைய மோட்டார் சைக்கிள் களை அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே நிறுத்தி வைத்து இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்களையும் யாரோ சில மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து மோட்டார் சைக்கிள்கள் எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையறிந்த உடனே பள்ளிகரணை போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், 4 மோட்டார் சைக்கிள்களும் முற்றிலுமாக எரிந்து நாசமாகியது. மேலும் சம்பவ இடத்திற்கு எந்த தீயணைப்பு வாகனமும் வரவில்லை என கூறப்படுகிறது

இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கடந்த மாதம் இதே போல் அடுக்கு மாடி குடியிருப்பின் 113-வது பிளாக்கிற்கு வெளியே நிறுத்தி இருந்த 7 மோட்டார் சைக்கிள்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் அவை முற்றிலும் எரிந்து நாசமாகின. தற்போது 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது முன் விரோதம் காரணமாக செய்யபட்டதா அல்லது யாராவது சைக்கோ ஆசாமிகளின் கைவரிசையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *