மக்கள் பயன் பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி…

மக்கள் பயன் பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி…
கொரோனா நோய் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கான விநியோகத்தை தொடங்கியது ரஷ்யா அரசு…

உலகையே முடக்கி வைத்திருக்கும் கொரோனா எனும் கொடிய வைரஸ் பெருந்தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்காக ரஷியாவில் ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை ரஷியா முறைப்படி பதிவு செய்துள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி போட்டு பரிசோதிக்கப்படுகின்றது.

இதற்கு மத்தியில், கொரோனாநோய் மேலும் ஏற்படாமல் இருக்க, மக்கள் பயன்பாட்டுக்காக இந்த தடுப்பூசியின் வினியோகம் தொடங்கி உள்ளது. இதை ரஷிய சுகாதார அமைச்சகம் நேற்று முறைப்படி அறிவித்ததுள்ளது.

இதையொட்டி ரஷிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் முதல் தொகுதி ரஷிய பிராந்தியங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் முதல் வினியோகமானது, தடுப்பூசியை பரவலாக்கும். மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதலில் போடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே ரஷியாவில்தான் கொரோனா தடுப்பூசி முதன்முதலாக மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என்பது உலக அரங்கில் முக்கியத்துவம் பெறுகின்றது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *