பீகாரில் வரும் 31ந்தேதி வரை ஊரடங்கு அமல்!

பீகாரில் வரும் 31ந்தேதி வரை ஊரடங்கு அமல்!

பீகாரில் இன்று முதல் வரும் 31ந்தேதி வரை 16 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பீகாரில் முதல் அமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடந்து வருகிறது. பீகாரில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் முதல் அமைச்சரின் உறவினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், முதல் அமைச்சர் நிதீஷ் குமார் தனது அலுவலக இல்லத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.  அதிகாரிகள், பொதுமக்கள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என்றும் கேட்டு கொண்டார்.  அவரது அலுவலகமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், 14 பேர் நேற்று பலியாகினர். 

இந்நிலையில் 1,320 பேருக்கு பாதிப்பு உறுதியானது.  இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரம் தொட்டது.  இந்த நிலையில், பீகாரில் இன்று முதல் வரும் 31ந்தேதி வரை 16 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அனைத்து அத்தியாவசிய சேவைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ரெயில், விமானம், வங்கிகள், மருத்துவமனைகள், விவசாயம் மற்றும் கட்டுமானம் தொடர்புடைய பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *