சினிமா படப்பிடிப்பிற்கு மத்திய அரசு அனுமதி…

சினிமா படப்பிடிப்பிற்கு மத்திய அரசு அனுமதி…
உலகம் முழுவதும் பரவத்தொடங்கிய கொரேனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் பல்வேறு துறைகள் முடங்கின குறிப்பாக திரைப்படத்துறையும் ஒன்று இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

மத்திய அரசுக்கும், அந்தந்த மாநில அரசுகளுக்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலதரப்பில் இருந்தும் ஷூட்டிங் நடத்த விரைவில் அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ஜவடேகர், மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தால் சினிமா ஷூட்டிங் நடத்தப்படலாம் எனத் தெரிவித்துள்ளார் அதன் படி மத்திய அரசு சினிமா படப்பிடிப்பு நடத்த சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது அதன் படி

படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்
உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்
உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கையுறை கட்டாயம்
படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்
படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *