சென்னையில் இன்று மிதமான மழை பெய்யும்…

சென்னையில் இன்று மிதமான மழை பெய்யும்…
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது .

உள்மாவட்டங்களான திருவள்ளூர், வேலூர்,திருப்பூர், திருவண்ணாமலை ஒட்டியுள்ள மாவட்டங்கள் , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது மழை பெய்யக்கூடும் என்றும் , புதுவை, காரைக்கால் போன்ற கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் ஆகஸ்ட் 27 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிதுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *