Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார் – ப.சிதம்பரம் டுவிட்டரில் இரங்கல்!!

August 27, 2020
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். நீதிபதியின் மறைவுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் (78), சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை உயிரிழந்தார். இவரது உடல் தேவக்கோட்டைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கு இறுதி சடங்குகள் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், மாசு கட்டுபாடு மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, வழக்கு ஒன்றில் பொது இடத்தில் புகைப் பிடிக்க தடை விதித்து, தீர்ப்பளித்ததன் மூலம் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டார். மேலும் இவர், சென்னை மற்றும் கேரள உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பதவி வகித்தவர். பின்னர் ராஜஸ்தான் மற்றும் ஆந்திர உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர்.

“பெண் குழந்தைகளுக்கு எச்சரிக்கை மட்டும் போதாது; ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்கிறோம் என்பதே முக்கியம்” — நடிகை ரேவதி

சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

தேங்கிக் கிடக்கும் 2000 டன் குப்பை; தீர்வு என்ன?

இவர் சட்ட ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும், இவர் முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2002-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2007-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சுமணனின் மனைவி மீனாட்சி, உடல்நலக்குறைவால் காரைக்குடி தனியார் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், தற்போது லட்சுமணனும் உயிரிழந்துள்ளது அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டுக்கும் சிவகங்கை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி திரு ஏ. ஆர். லக்ஷ்மணன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

— P. Chidambaram (@PChidambaram_IN) August 27, 2020

முன்னாள் நீதிபதி லட்சுமணன் மறைவுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ்நாட்டுக்கும் சிவகங்கை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி திரு ஏ. ஆர். லக்ஷ்மணன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பாரதிய ஜனதா கட்சி பேஸ்புக் விளம்பரத்திற்கு இத்தனை கோடியா!!

Next Post

மேலும் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கு கொரோனா!!

Next Post

மேலும் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கு கொரோனா!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version