அரைநிர்வாணமாக நடுரோட்டில் நின்று மதுபோதையில் காவலர் அட்டகாசம்…!

அரைநிர்வாணமாக நடுரோட்டில் நின்று மதுபோதையில் காவலர் அட்டகாசம்…!

மதுபோதையில் காவலர் ஒருவர் கார் ஒட்டி விபத்தினை ஏற்படுத்தியதோடு, அரைநிர்வாணமாக மக்களை அச்சுறுத்திய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தாமணிப்பட்டி காவல்நிலையத்தில், காவலராக பணியாற்றுபவர் லோகநாதன் (வயது 28), தந்தை பெயர் கருப்பையா. திருமாநிலையூர் பகுதியில் வசிப்பவர், இவர், ஏற்கனவே கரூர் நகர போக்குவரத்து காவலராக பணியாற்றிய நிலையில், தற்போது சிந்தாமணிப்பட்டி காவல்நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை, இவர் சொகுசு ஸ்விப்ட் காரினை கரூரிலிருந்து தாந்தோன்றிமலையை கடந்து நீதிமன்றத்தினை தாண்டி சென்ற போது, தாந்தோன்றிமலை, காளியப்பனூர், நீதிமன்றம் பேருந்து நிறுத்தம் ஆகிய பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் மீது மோதினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற பேருந்து நிறுத்தம் சென்ற போது பொதுமக்களே காரை ஓட்டி வந்த காவலரை மடக்கி பிடித்துள்ளனர். இந்நிலையில், இந்த தகவல் தாந்தோன்றிமலை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் விரைந்து அந்த இட்த்திற்கு செல்லும் போது. சக காவலர் என்றும் பாராமல் அசிங்க, அசிங்கமான கொச்சை வார்த்தைகளை கையாண்டுள்ளார். பொதுமக்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில், சட்டையை கழட்டி விட்டு அரைநிர்வாணமாக நின்று கொண்டு நடுரோட்டில் வாகனத்தினையும் மறித்துள்ளார். பின்னர் அங்குள்ள பொதுமக்களையும் மரியாதைக்குறைவாக பேசினார். நீதிமன்ற அலுவலகத்தின் முன்பேயும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் முன்புறம் அருகிலேயே, காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அருகே இப்படி ஒரு தரமற்ற ஒரு காவலரின் செயலால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சக காவலர் என்று தெரிந்ததினால், அவ்வளவு கேட்ட வார்த்தையும் வாங்கி கொண்டு அவரை ஆட்டோவில் சக காவலர்கள் தப்ப விட்டனர். இந்த சம்பவம் இப்பகுதியில் மட்டுமில்லாமல், தமிழக அளவில் உள்ள காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிடிப்பட்ட கார் தாந்தோன்றிமலை காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த காரில், சரக்கு அடிக்க தேவையான சைட் டிஷ் சுண்டல், வாட்டர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *