இன்று ஐபிஎல் லீக்கில் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஐபிஎல் -2020 போட்டிகள் ரசிகர்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தக் கொரொனா காலக்கட்டத்தில் ரசிகர்களின் மனதை மகிழ்விக்கும் ஒரு அம்சமாக ஐபிஎல் தொடர் அமைந்துள்ளது.
இந்நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் ராஜஸ்தான் அணி ஹைதராபாத் அணியுடன் மோதுகின்றது., மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி, டெல்லி அணியுடன் மோதுகிறது,
இன்று மாலை 3;30 மணிக்குத் துபாயில் நடைபெறும் முதல் போட்டியில் ஸ்மித் தலைமயிலான ராஜஸ்தான் அணியும் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் களன் காண்கின்றன.
இவ்விரு அணிகளும் இதுவரை 11 முறை மோதியுள்ளன. அதில் ஹைதராபாத் அணி 6 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அபுதாபியில் நடைபெறும் மற்றொருஆட்டம் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இதி ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன
இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை மோதியுள்ளன.இதில் மும்பை அணி 12 போட்டிகளிலும் டெல்லி அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.




