நாடு முழுவதும் இன்று முதல் புதிய சீர்திருத்தங்கள் ….

நாடு முழுவதும் இன்று முதல் புதிய சீர்திருத்தங்கள் ….

இந்தியா முழுவதும் இன்று முதல் ஓட்டுநர் உரிமத்துக்கான சில புதிய சீர்திருத்தங்கள் அமலுக்கு வரவுள்ளது.

  1. ஓட்டுநர் உரிமத்துக்கான ஆவணங்கள், இ-சலான்கள், ஆகிய முறைகளை இனிமேல் இணையதளம் வழியாக மட்டுமே பெறப்படும் எனவும்ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இனிமேல் அதிகமான ஆவணங்களைப் பெறத் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
  2. மக்களுக்கு மருத்துவக் காப்பீடுகளை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் கொள்கை மற்றும் பாலிசி குறித்த விளக்கங்களை மக்களுக்குப் புரியும்  வகையில் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இனிமேல் டெலிமெடிசினிக்குப் இந்தக் காப்பீடு பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
  3. சுவீட் கடைகளை வைத்திருப்போர் அந்த இனிப்புகள் எத்தனை நாட்களுக்குள் சாப்பிட வேண்டுமென்பதை வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
  4. நாட்டில் இறக்குமதியாகும் டிவிக்களுக்கு 5% சுங்க விதிக்கப்படுகிறது. இதனால் அவற்றில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் வெளிநாட்டிலுள்ள உறவினர்களுக்குப் பணப்பரிவர்த்தனை செய்தால் அதற்குக் கூடுதலாக 5% வரி வசூலிக்கப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *