நெருக்கடியான தருணங்களிலும் இந்திய அணியை வெற்றிநோக்கி வழிநடத்திய ‘கேப்டன் கூல்’ என ஸ்டாலின் புகழாரம்…

நெருக்கடியான தருணங்களிலும் இந்திய அணியை  வெற்றிநோக்கி வழிநடத்திய ‘கேப்டன் கூல்’ என ஸ்டாலின் புகழாரம்…
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டன், இந்தியாவுக்கு அதிக கோப்பைகளை பெற்று தந்தவருமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார்.

அவரின் இந்த முடிவை அறிந்த ரசிகர்கள் பலர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தோனியின் இந்த அறிவிப்பு குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்ட திமுக தலைவர் மு.க ஸ்டாலின், முன்னாள் திமுக தலைவரும் , முன்னாள் முதல்வருமான கருணாநிதியுடன் தோனி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து,  “நெருக்கடியான தருணங்களிலும் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை வழிநடத்திய ‘கேப்டன் கூல்’ அவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

ஓய்வுக்கு பிறகான வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துவதாக தனது ட்விட்டர் பதிவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *