மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ் பாய்ந்தது!

மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ் பாய்ந்தது!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகியுள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து உயிரிழந்தார். மாணவி எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில் மாணவியின் வகுப்பு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், கைதாகி சிறையில் உள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *