தாகத்தால் தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்; மனதை பிசையும் வீடியோ

தாகத்தால் தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்; மனதை பிசையும் வீடியோ

சாலையில் செல்லும் நபர் ஒருவர் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பதை பார்த்துவிட்டு அணில் ஒன்று முன் கால்களை உயர்த்தி தண்ணீர் வேண்டும் என்பது போல் செய்கை செய்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

சமூக ஊடகங்களில் அவ்வப்போது விலங்குகளின் சேட்டைகள், குறும்புத் தனங்கள் வீடியோவாக வெளியாகி பார்வையாளர்களை கவரும். அதே போல் தற்போது அணில் ஒன்றின் செய்கை காண்போர் மனதை உருக வைக்கும் வகையில் உள்ளது. அந்த வீடியோ ஒரு ஆண், பெண் சாலையில் தண்ணீர் பாட்டிலுடன் நடந்து செல்கிறார்கள். அங்கு தாகத்துடன் சுற்றித் திரிந்த அணில் அவர்கள் கையில் தண்ணீர் பாட்டில் இருப்பதை கண்டுபிடித்து, தண்ணீர் வேண்டும் என முன்னங்கால்கள் இரண்டையும் உயர்த்தி தொடர்ந்து கேட்டவாறு பின் தொடர்ந்து வருகிறது.

அவர்கள் தண்ணீர் பாட்டிலை நீட்டியவுடன் தனது சிறிய வாயை வைத்து தண்ணீரை உறிஞ்சி குடித்துவிட்டு ஓடுகிறது. இந்த வீடியோ நேற்று முன் தினம் ரெட்டிட் சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்டு தற்போது டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றிலும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. அனைவரும் அணிலுக்கு அனுதாபம் தெரிவித்து கருத்து பதிவிட்டு வருவதுடன், நீரின் அவசியம் குறித்தும் பேசி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *