தமிழ் சினிமாவிற்கு பாரதிராஜா அளித்துள்ள பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருதை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் தேசிய விருது பெற்ற தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்களான கமல்ஹாசன், வெற்றிமாறன், பார்த்திபன், சேரன், தனுஷ், கலைப்புலி தாணு, பாலா உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
” கடந்த 43 வருடங்களாக தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு பல்வேறு பங்களிப்பை வழங்கி வருவதாகவும், பெண்சிசு கொலை, ஜாதி வேற்றுமை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை மையமாக கொண்டு சமூக அக்கறையுள்ள படங்களை இயக்குவதற்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளதாகவும் ” அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.