குடும்பத்தைக் காப்பாற்ற சிறுத்தையை போராடிக் கொன்ற நபர்..!

குடும்பத்தைக் காப்பாற்ற சிறுத்தையை போராடிக் கொன்ற நபர்..!

குடும்பத்தைக் காப்பாற்ற சிறுத்தையை போராடிக் கொன்ற நபரின் வைரல் வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் திரிஷ்யம். இதன் தொடர்ச்சியான திரிஷ்யம் 2 சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியானது. இதில் ஜார்ஜ் குட்டி என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருப்பார். அதாவது தற்காப்புக்காக செய்த கொலையில் இருந்து ஜார்ஜ்குட்டி தனது குடும்பத்தை எப்படி பாதுகாக்கிறார் என்பது போன்று கதை வடிவமைக்கப்பட்டிருக்கும்

கர்நாடகாவில் ஒரு உண்மையான ஜார்ஜ்குட்டி சிறுத்தையிடம் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றியுள்ளார். ஹாசன் மாவட்டத்தில் அராசிகேர் தாலுகாவில் வசிப்பவர் ராஜகோபால் நாயக். இவர் தனது மனைவி சந்திரம்மா மற்றும் அவர்களது குழந்தை கிரானுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு சிறுத்தை புதரிலிருந்து அவர்கள் மேல் குதித்தது. பின்னர், சிறுத்தை கீரனின் காலை கடிக்கத் தொடங்கியது. மேலும் சந்திரம்மையும் தாக்க முயன்றது.

https://twitter.com/revathitweets/status/1364400371179810816?s=20

இதைப்பார்த்த ராஜகோபால் சிறுத்தை மீது பாய்ந்து அதன் கழுத்தை நெரித்து தனது முழங்கையால் சிறுத்தையில் தலையில் அடிக்கத்தொடங்கினார். சிறுத்தை அதிலிருந்து தப்ப முயன்றது. இருப்பினும், ராஜகோபால் விடாமல், சிறுத்தையின் கழுத்தில் தனது பிடியை இறுக்கிக் கொண்டார். மூச்சுத்திணறிய சிறுத்தை அதே இடத்தில் இறந்தது. ராஜகோபாலுக்கும் முகம் மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் பல உள்ளூர்வாசிகள் கூடியிருந்தனர். பின்னர் ராஜகோபால் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நெற்றியில் ரத்தம் வழிய வழிய ராஜகோபால் இறந்த சிறுத்தையின் அருகில் அமர்ந்து தண்ணீர் குடிப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *