இனி எங்களுக்கும் இருக்கு வார விடுமுறை!!!

இனி எங்களுக்கும் இருக்கு வார விடுமுறை!!!

தமிழகத்தில் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் காவல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் காவலர்கள் பணியாற்றும் நேரம், விடுப்பு முறை மற்றும் பணி நாள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் காவலர்கள் தொடர்ந்து 7 நாட்கள் வேலை செய்வதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர் என்றும் இதை யடுத்து காவலர்களுக்கு பணி விதிகள்படி வாரத்தில் 6 நாள் வேலை பார்த்தால், ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும் என தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக கொரோனா காரணமாகவும், உடல்நிலை சரியில்லாமலும், மன உளைச்சல் காரணமாக காவலர்கள் அதிகம் உயிரிழப்பதை தடுக்க, வார விடுப்பை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பும், ஞாயிற்றுக்கிழமை விடுப்பை சுழற்சி முறையில் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *