மதுரையில் சர்ச்சையை கிளப்பிய விஜய் பட போஸ்டர்?

மதுரையில் சர்ச்சையை கிளப்பிய விஜய் பட போஸ்டர்?
தமிழ் திரைப்படத்தின் வசூல் சக்கரவர்த்தி என அழைக்க படுபவர் நடிகர் விஜய் இவரின் ஒவ்வொரு படம் வரும் போதும் அரசியல் ரீதியாக எதாவது சர்ச்சை வரும்…
Master Vijay

ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் எந்த படமும் வரவில்லை என்றாலும் விஜய்யின் ரசிகர்கள் அவரை அரசியலில் விரைவில் களம் காண அவருக்கு பல விதமான போஸ்டர்கள் அடிக்கின்றனர் அப்படி ஒரு போஸ்டர் மதுரையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் மக்கள் இயக்கத்தின் புரட்சி தலைவியே என விஜய் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், மக்கள் இயக்கத்தின் புரட்சிதலைவரே என நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போலவும் சித்தரித்து அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

விஜய்-சங்கீதா திருமண நாளை கொண்டாடும் விதமாக ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை உருவகப்படுத்தும் தோற்றத்தை கணவன்-மனைவி போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *