Wednesday, September 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்

முகத்தை பளீச்னு மாற்றும் ‟தக்காளி”

Jenifer James by Jenifer James
August 1, 2020 1:47 PM GMT+5:30 - Updated on August 4, 2020 12:27 AM GMT+5:30
தினமும் தக்காளியை முகத்தில் தேய்த்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.தக்காளி ஃபேஸ்வாஷ் மற்றும் ஃபேஸ்பேக் எப்படி ரெடி பண்ணுவது என்பதைப் பார்க்கலாம்.

இன்றையக் காலகட்டத்தில் அழகின் மீது அக்கறை காட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, பெண்களே அதிகளவில் அக்கறை காட்டுகின்றனர். அதுவும் செயற்கை வழியில் செல்லாமல், இயற்கை வழியை நாடுகின்ற பெண்கள் அதிகம். இதற்காக வீட்டில் இருக்கும் காய்கறிகளை கொண்டு எப்படி அழகாக மாறுவது என்ற எண்ணம் உண்டாகத் தொடங்கியுள்ளது.

அப்படி, வீட்டில் நாம் அன்றாடம் சமையலறையில் உபயோகப்படுத்தும் ஒரு காய் தான் தக்காளி . இந்த தக்காளியில் உள்ள அமிலத் தன்மை மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகளால் சரும ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு,  பல்வேறு பிரச்சனைகளிலிருந்து உடனடி தீர்வு கிடைக்கிறது.முகப்பரு பிரச்சனைக்கு தக்காளி ஒரு நல்ல இயற்கை மருந்தாகும், இதற்கு தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி தான் காரணம்.

சர்க்கரை விற்பனை ஒதுக்கீட்டில் புதிய முறை; செப்டம்பர் முதல் அமல்!

அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு இருந்தால் ‘சிவப்பு எச்சரிக்கை’!

அரிசி முதல் சர்க்கரை வரை… எகிறும் அத்தியாவசியப் பொருட்களின் விலை; காரணம் என்ன?

தக்காளியால் கிடைக்கும் நன்மைகள்

முகப்பரு பள்ளம் சுருங்கும்

சிலருக்கு சருமத்தில் மேடு பள்ளங்கள் அதிகமாக இருக்கும். அதாவது முகப்பரு உண்டான இடத்தை கிள்ளி எடுக்கும் போது அந்தப் பகுதி பள்ளமாக இருக்கும். இதற்கு தக்காளி சிறந்த மருந்தாகும். அந்த இடத்தில், தக்காளியை சிறு துண்டுகளாக்கி பள்ளமாக இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவி வேண்டும். அப்படி செய்து வந்தால், பள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கும்.

சருமக் கருமைகள் நீங்க

வெயிலின் தாக்கம் காரணமாக சருமம் கருப்படைந்து காணப்படும். இதற்கு இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் 15 நிமிடங்கள் தக்காளி துண்டால் தடவி, பின் குளிர்ந்த நீரால் கழுவி வர வேண்டும்.முகத்தில் மட்டுமல்ல கைகளிலும் இவ்வாறு செய்யலாம். இப்படி செய்தால் கருமைகள் மாறும்.

பொலிவான முகம்

முகப்பொலிவை அதிகரிக்க,  தக்காளியை சிறிது துண்டாக்கி,  அதனை தேன் அல்லது சர்க்கரையில் நனைத்து முகத்தில் நன்றாகத் தேய்க்க வேண்டும். பின் 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிடுங்க. பிறகு பார்த்தால் முகம் பொலிவுடன் காணப்படும்.

எண்ணெய் பசை நீங்க

ஒரு சிலருக்கு முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும். இதனை போக்க செயற்கை முறையில் கிடைக்கும் மருந்துப் பொருட்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கையில் கிடைக்கும் தக்காளியே சிறந்தது. எண்ணெய் பசை நீங்க தக்காளியை தினமும் முகத்தில் தேய்த்து பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் நல்ல பலனை பெற முடியும்.

தக்காளி பேஸ்வாஷ் மற்றும் பேஸ்பேக்

தக்காளி பேஸ்வாஷ்

தினமும் காலையில் வெளியில் சென்று பின் மாலையில் வீட்டிற்கு வரும் போது, முகத்தில் ஏகப்பட்ட அழுக்குகள் நிறைந்திருக்கும். அதற்கு நாம் சோப் பயன்படுத்துவோம். ஆனால், அப்படி செய்யும் போது நம் முகத்தில் அழுக்குகள் இருந்துகொண்டே தான் இருக்கும். ஒரு மாற்றத்திற்காக வீட்டிற்கு வந்ததும், சோப் பயன்படுத்தாமல், ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி ஜுசுடன் சிறிது எலுமிச்சை சாறை சேர்ந்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்கும்.

தக்காளி பேஸ்பேக்

தக்காளியை கொண்டு பேஸ்பேக் போட நினைத்தால் தக்காளி சாறுடன் சிறிது தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்ந்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்துப் பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முகத்தின் அழகு மேம்பட்டிருக்கும் என்பதை உணரலாம்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பிரபல இந்தி பாடலுக்கு படுகவர்ச்சியாக ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்…

Next Post

வெப் சீரிஸ்களுக்கு எங்க அனுமதியும் அவசியம் – பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை

Next Post

வெப் சீரிஸ்களுக்கு எங்க அனுமதியும் அவசியம் - பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30

வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளவின்றிப் பயன்படுத்த வேண்டாம்: மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை

September 22, 2026 11:05 PM GMT+5:30

தேசிய திரைப்பட விருதுகளில் தமிழுக்கு 10 விருதுகள்; தனுஷ் முதல் ஜி.வி.பிரகாஷ் வரை விருது பெற்றவர்கள் யார்?

September 22, 2026 10:22 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version