கொரோனா காலக்கட்டத்தில் அதிகளவு சானிடைசர்களை பயன்படுத்தும் போது உடலில் பல்வேறு சரும அலர்ஜி ஏற்படும் எனவும், எனவே இதனை முறையாக கையாள வேண்டும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் காலக்கட்டத்தில் இருந்து முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளி மற்றும் குறிப்பாக பொது இடங்களுக்கு வெளியில் சென்று வந்தாலே அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்பது தான் மருத்துவ நிபுணர்களின் அறிவுரையாக இருந்து வருகிறது. குறிப்பாக சானிடைசர்களை கொண்டு கைகளை கழுவினால் நோய் தொற்றிலிருந்து நம்மை காப்பாற்ற முடியும் என்ற கருத்து பரவலாக அனைத்து தரப்பட்ட மக்களிடம் எழுந்துவந்தது. இதன் காரணமாக தான் ஒரு காலக்கட்டத்தில் சானிடைசர்களின் பற்றாக்குறையும் நிலவிவந்ததை நாம் பார்த்திருப்போம். ஆனால் இத்தகைய சானிடைசர்கள் மக்களுக்கு உடலில் பல்வேறு தீங்குகளை விளைவிக்கும் என்கின்றனர் மருத்துல வல்லுநர்கள். எனவே இதனை எவ்வாறு உபயோகிக்கப்படுத்த வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
சானிடைசர்களை அளவுக்கு மீறி பயன்படுத்தலாமா?
கொரோனா அச்சத்தின் காரணமாக அடிக்கடி சானிடைசர்களை கொண்டு கைகழுவும் நடைமுறைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். ஆனால் இதனை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தும் வேளைகளில், அவை தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை அழிப்பதோடு, நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்து கொன்று விடுகிறது. அதுமட்டுமில்லாமல், அவை சரும அழற்சி போன்றவற்றை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. மேலும் அதிகப்படியான வறட்சி, எரிச்சல் மற்றும் சிவத்தல், சரும வெடிப்பு அல்லது இரத்த கசிவு போன்ற பிரச்சனைகளும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஆல்கஹால் இல்லாத மற்றும் ஆல்கஹால் சார்ந்த சார்ந்த சானிடைசர்கள் இரண்டுமே நம் உடலில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளிலிருந்து நம்மை காப்பாற்றக்கூடியவை. இருப்பினும் இதனை அளவிற்கு மீறி பயன்படுத்தும் போது நன்மையளிக்கக் கூடியது. ஆனால், அதற்கு மாறாக, அளவிற்கு அதிகமாக சானிடைசர் உபயோகித்தால் அவை உங்கள் சருமத்தை பாதிக்க செய்து கை அலர்ஜி போன்றவற்றை உண்டாக்கிவிடும்.

சானிடைசர்களில் தேவையற்ற இரசாயன மாசுபாடு
சானிடைசர்களில் பயன்படுத்தும் போது அதில் உள்ள இராசயண பொருட்கள் மக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமில்லாமல் இயற்கையினை பாதுகாக்கும் வகையில் தான் இந்த சானிடைசர்கள் விளங்கிவருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நாம் கொரோனா தொடங்கி காலக்கட்டத்தில் இருந்தே சானிடைசர்களை அதிகளவில் பயன்படுத்திவிட்டோம். இதில் உள்ள இராசாயணங்கள் நிலத்திற்குள் சென்று மண்ணினை பாழாக்குவதோடு இயற்கை வளங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவருகிறது.
ஒரு வேளை நீங்கள் நீண்ட காலமாக சானிடைசர்களை பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் கைகளில் அழற்சியின் அறிகுறிகள் வெளிப்பட தொடங்கலாம். அதுபோன்ற சமயங்களில், சானிடைசர் பயன்படுத்துவதை விட்டுவிடுவதே நல்லது. மேலும், மாய்ஸ்சுரைசர் மற்றும் க்ரீம்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது. இது உங்கள் சருமத்தை ஆரோக்கியத்துடனும், முறையான அமைப்புடனும் வைத்திருக்க உதவிடும். ஒரு வேளை உங்களுக்கு, ஏற்கனவே, சரும அழற்சி அல்லது வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் சானிடைசர் உபயோகித்த உடனேயே மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவும். இது, சருமத்தை வறண்டு விடாமல் பாதுகாக்கும். அதுமட்டுமல்லாமல், சரும அரிப்பு, தோல் அழற்சி மற்றும் தோல் தடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு காட்டிட உதவும்.

தற்போது சானிடைசர்களை தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு பதிலாக வீட்டில் உள்ள சோப்பு மற்றும் தண்ணீரினை கொண்டு கைகளை நன்றாக கழுவினாலே போதும். இயற்கை வளங்களை காக்கவும், உடலில் சருக அலர்ஜி ஏற்படாமலும் இருக்க இதுப்போன்ற நடைமுறைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.