குழாய் அடி சண்டையாகும் கூவத்தூர் மேட்டர்.. வாய்விட்டு கதறிய சி.வி.சண்முகம்.. துணிந்து நிற்கும் டிடிவி

குழாய் அடி சண்டையாகும் கூவத்தூர் மேட்டர்.. வாய்விட்டு கதறிய சி.வி.சண்முகம்.. துணிந்து நிற்கும் டிடிவி

கூவத்தூரில் அனைவருக்கும் ஊத்திக்கொடுத்து குடியை கெடுத்தவர் டிடிவி. தினகரன் தான் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்திற்கு டிடிவி. தினகரன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை :

சசிகலா விடுதலை பெற்று சென்னை திரும்பியவுடன் அதிமுக கட்சிக்குள் மீண்டும் வந்துவிட கூடாது என்பதற்காக முதல்வர் முதல் தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் வரை மறைமுக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், சசிகலாவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பின்வாங்க, சி.வி.சண்முகம் மட்டுமே தொடர்ந்து சசிகலாவை எதிர்த்து ஊடங்கங்களில் கருத்துக்களை பதிவு செய்கிறார். இதுகுறித்து டிடிவி. தினகரன் பேட்டியளித்த போது, சி.வி.சண்முகம் நிதானமாக பேசினாரா? அல்லது போதையில் உளறினாரா? என்று கேள்வியெழுப்பினார்.

இந்தநிலையில், சி.வி.சண்முகம் நேற்று ஒருமையில் டிடிவி. தினகரன் பற்றி ஒருமையில் பேசினார். அதில், என்னை நிதானமாக பேசினாரா என்று டிடிவி கேட்கிறார். கூவத்தூரில் ஊத்திக்கொடுத்து பலரது குடியை கெடுத்துவர் அவர் தான். அவரது குலத்தொழில் ஊத்திக்கொடுப்பது தான். சசிகலா உங்களுக்கு ஒரு எச்சரிக்கை டிடிவியை நம்பாதீர்கள் என்று தெரிவித்தார்.

அன்று மாலையே டிடிவி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் சி.வி.சண்முகம் குறித்து கூறியதாவது: , நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் கூச்சலிடுகிறார்.

Read more – இன்றைய ராசிபலன் 12.02.2021!!!

பதவி வெறி படுத்தும் பாடு, எப்படி எல்லாம் இவர்களை பேச வைக்கிறது. தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக் கொள்வது உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. வாழ்க வசவாளர்கள் என்று தெரிவித்தார்.

குழி தோண்டி புதைத்த பூதத்தை, கிச்சுகிச்சு மூட்டி தூண்டிவிட்ட கதையாகிவிட்டது இன்றைய அதிமுகவின் நிலை..

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *