Friday, October 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

நீட் தேர்வு தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும்- கமல்ஹாசன்!!

mukesh by mukesh
September 22, 2021 11:54 AM GMT+5:30

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான குரல்கள் உள்ள நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் அவர்கள், நீட் தேர்வு அபாயம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீட் ஓர் உயிர்க்கொல்லித் தேர்வு என்பதை உரக்கச் சொல்கிறது நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை! நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, இந்தத் தேர்வின் தீய விளைவுகளைப் பட்டியலிடுகிறது. அதன்படி, கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ் வழியில் பயின்றோர் மருத்துவராகும் கனவை இத்தேர்வு சிதைக்கிறது. நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 14.44 சதவீதத்திலிருந்து வெறும் 1.7 சதவீதம் என சரிந்துள்ளது.

சாப்பிட்டதும் 10 நிமிடம் நடந்தால் போதும்!

உலக மோதல்கள் தொடரும் — புதின் எச்சரிக்கை!

போர்க்களத்தில் உக்ரைனின் புதிய ஏவுகணை!

நீட் சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான தேர்வு என்பதற்கு இந்த ஒரு புள்ளிவிவரமே போதுமானது. நீட் தேர்வுக்குப் பிறகு எம்.பி.பி.எஸ் படிப்பில் சி.பி.எஸ்.இ மற்றும் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள்தான் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

நீட் தேர்வில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களில் 90% தனியார் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர். நீட் தேர்வின் பின்னால் இருப்பது வணிக நோக்கம்தான் என்பது, நான் ஆரம்பம் முதலே சொல்லிவரும் ஒன்று. இந்தப் புள்ளிவிவரங்களும் அதை உறுதி செய்துள்ளன.

நாட்டிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக்கொண்டிருப்பது தமிழகம். இந்தத் தேர்வு நீடிக்குமானால் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு சிதையும் அபாயம் உள்ளது.

நீட் தேர்வு அறிமுகமான பிறகு, தமிழ் வழியில் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது. உலகம் முழுக்க தாய்மொழிக் கல்வி ஊக்குவிக்கப்பட்டு வரும் சூழலில், நீட் தேர்வு தாய்மொழிக் கல்விக்கு எதிரான மனோநிலையை வளர்த்து வருகிறது.

நகர்ப்புறத்தில் பிறந்த பணவசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பினை உருவாக்கும் இந்த அறமற்ற உயிர்க்கொல்லித் தேர்வினை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியாவிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும்.

உண்மைகளை வெளிக்கொணர்ந்து சட்டப் போராட்டத்திற்கான வழிவகைகளையும் ஆராய்ந்து சொன்ன ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினருக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இக்குழுவின் பரிந்துரைகளின்படி விரைவில் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவு செய்துள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நாளை வெளியாகும் வலிமை டீசர்? தீயாக கிளம்பிய ரசிகர்கள்!!

Next Post

பொங்கலுக்கு வெளியாகிறது தல அஜித்குமாரின் வலிமை!!

Next Post

பொங்கலுக்கு வெளியாகிறது தல அஜித்குமாரின் வலிமை!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சாப்பிட்டதும் 10 நிமிடம் நடந்தால் போதும்!

October 1, 2026 11:54 PM GMT+5:30

உலக மோதல்கள் தொடரும் — புதின் எச்சரிக்கை!

October 1, 2026 11:44 PM GMT+5:30

போர்க்களத்தில் உக்ரைனின் புதிய ஏவுகணை!

October 1, 2026 11:36 PM GMT+5:30

நாக்பூரில் ராணுவ விமான ஆலை!

October 1, 2026 11:29 PM GMT+5:30

அமெரிக்காவுக்கு மாற்று; கனடாவின் புதிய எண்ணெய்க் குழாய்!

October 1, 2026 11:17 PM GMT+5:30

ஆன்லைனில் அனுமதியற்ற CCTV கேமராக்கள்!

October 1, 2026 9:56 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version