சட்ட மேற்படிப்புக்கும் நுழைவுத் தேர்வா? வைகோ எதிர்ப்பு!

சட்ட மேற்படிப்புக்கும் நுழைவுத் தேர்வா? வைகோ எதிர்ப்பு!

முதுகலை சட்ட நுழைவுத் தேர்வு நடத்தும் அறிவிப்புக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகம் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதனைத் தொடர்ந்து எஞ்சினீயரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் முதுகலை சட்டப் படிப்புக்கு (LLM) இனிமேல் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படும். முதுநிலை சட்டப் படிப்பு எல்.எல்.எம். என்பது இரண்டு ஆண்டு படிப்பாக்கி, ஓராண்டு படிப்பு ரத்து செய்யப்படும் என பார் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் சட்டம் பயின்று, முதுநிலை சட்ட மேற்படிப்பு பயில்வதை முற்றிலுமாகத் தடை செய்திடும் வகையில் உள்நோக்கத்தோடு இந்திய பார் கவுன்சில் அறிவிப்புகளைச் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

read more: தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை கைவிட்ட ராமதாஸ்


சமூக நீதிக் கோட்பாட்டின் ஆணி வேரையே அறுத்தெறியத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் இத்தகைய செயல் கடும் கண்டனத்துக்கு உரியதாகும் என்றதோடு அவர், கல்வித் துறையில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வரும் மத்திய பாஜக அரசு, முதுநிலை சட்டப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்த முயல்வது ஏற்கத்தக்கது அல்ல. எனவே இந்திய பார் கவுன்சில் தனது அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் வைகோ.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *