உயிரிழந்த முருகானந்தத்திற்கு உரிய இழப்பீடு வழங்குக :முதலமைச்சருக்கு ராமதாஸ் கோரிக்கை!!

உயிரிழந்த முருகானந்தத்திற்கு உரிய இழப்பீடு வழங்குக :முதலமைச்சருக்கு ராமதாஸ் கோரிக்கை!!

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்த முருகானந்தத்தின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. விரிவுரையாளர்களின் பொருளாதார நிதி நெருக்கடியைப் போக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் கவுரவ விரிவுரையாளர்கள் அனுபவிக்கும் துயரம் குறித்தும், முருகானந்தம் என்ற விரிவுரையாளர் உயிரிழந்தது குறித்தும் நேற்று நான் அரசுக்கு வலியுறுத்தியிருந்தேன். அடுத்த 6 மணி நேரத்தில் ஊதியம் வழங்க அரசு ஆணையிட்டது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்பட்டாலும் கூட, கவுரவ விரிவுரையாளர் முருகானந்தம் மறைவால் அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பு ஈடு செய்யப்படவில்லை. வறுமையில் வாடும் அவரது குடும்பத்திற்கு நியாயமான இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட வேண்டும்!, என பதிவு செய்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *