திமுக ஆட்சி சூப்பரு-சொல்றது நம்ம விஜயபிரபாகரன்

திமுக ஆட்சி சூப்பரு-சொல்றது நம்ம விஜயபிரபாகரன்

தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை கிராமத்தில் தேமுதிக திருமங்கலம் ஊராட்சி செயலாளர் செல்லத்துரை – மீனா தம்பதியினர் திருமணம்  நடைபெற்றது .இந்த திருமண விழாவை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நல சிகிச்சைக்காக துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார்.  அவருக்கு மருத்துவர்கள் சிறந்த சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும், தேமுதிக கட்சியில் விரைவில் மாற்றங்கள் ஏற்படும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதற்கான முடிவை விஜயகாந்த் அவர்கள் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் திமுகவின் ஆட்சி குறித்து கூறுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது. விஜயகாந்த் கூறுவது போல ஒரு ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் முடிந்த நிலையில் தான் அந்த ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *