ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை: இணையதள வேகம் குறைவால் கால தாமதமாகிறது….

ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை: இணையதள வேகம் குறைவால் கால தாமதமாகிறது….
ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை தொடங்கப்பட்டுள்ள நிலையில், இணையதள வேகம் குறைவால் பொருட்கள் வினியோகத்தில் காலதாமதம் ஆகிறது என்றும், சர்வரின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

நம் தமிழகத்தில் இந்த ஆண்டு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த முறையால் அனைவரும் பயன்பெறுவர் என்று அனைவரும் நம்புகிறார்கள். இந்த திட்டத்தால் எந்த மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் கூட மற்ற மாநிலத்தில் ரேஷன் பொருட்கள் வாங்கி கொள்ளலாம். இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 1-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த பயோ மெட்ரிக் முறைப்படி, ரேஷன் கார்டில் உள்ளவர்களின் பெயர்களுடன் அவர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் கைரேகை சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால், ஒரு ரேஷன் கார்டை உறுப்பினர் அல்லாத எவரும் கொண்டு சென்று பொருட்களை வாங்க முடியாது.

பல ஆண்டுகளாக நாம் ஒரே நபர் பல ரேஷன் காடுகள் கொண்டு சென்று பொருள் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளோம். அனால் இடஙக பயோ மெட்ரிக் முரையால் அதுபோன்று இனிமேல் வாங்க முடியாது. ஒரு நபர் ஒரு முறை தான் பொருட்கள் வாங்க முடியும். மேலும் இந்த பயோ மெட்ரிக் முறைப்படி, ரேஷன் கார்டில் உள்ளவர்களின் பெயர்களுடன் அவர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் கைரேகை சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால், ஒரு ரேஷன் கார்டை உறுப்பினர் அல்லாத எவரும் கொண்டு சென்று பொருட்களை வாங்க முடியாது.

இந்நிலையில் பயோ மெட்ரிக் முறையில் கைரேகை ஒத்து போகாத நபர்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய குறியீடு எண்(ஓ.டி.பி.) அனுப்பப்படும். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட எண்ணுக்கு ஓ.டி.பி. சரியாக சென்று சேரவில்லை என்றால், ரேஷன் கார்டுடன்(ஸ்மார்ட் கார்டு) இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு ஓ.டி.பி. அனுப்பப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது.

ஆனால், இணையதள வேகம் குறைவாக இருப்பதால், ‘சர்வரில்’ இருந்து தகவல்களை பெறுவதற்கு காலதாமதம் ஆகிறது என்றும். இதனால், சில நேரங்களில் ஒரு நபருக்கு 10 நிமிடங்களுக்கு மேலாக காலதாமதம் ஆகிறது என்றும், அதன் காரணமாக மொத்தமாக பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த தொழில்நுட்ப கோளாறுகளை சீக்கிரம் சரிசெய்து விரைவில் இந்த திட்டத்தில் பெருமளவில் பயனப்டுத்துவர் என எதிர்பாக்கப்படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *