பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்தது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்தது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்தது ஏன்? என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்தது ஏன்? என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
அறிவுப்பூர்வ முடிவு
தமிழகத்தில் கோவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கு மக்களும் நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.

தமிழக அரசைப் பொறுத்தவரை எந்த முடிவையும் தானாக எடுப்பது கிடையாது. தகுந்த ஆலோசனைகளைப் பெற்றே செயல்படுகிறது. இதில் அரசியலை விட அறிவுபூர்வமாக மட்டுமே அணுக வேண்டும்.
ஒத்திவைத்தது ஏன்?
மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்றே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. எனினும், மாணவர்களின் எதிர்காலம் வீணாகி விடக்கூடாது என்பதன் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்பட்டது. எனினும் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்கலாம் என்று அறிவுறுத்தினர்.

இது மக்களுக்கான அரசு என்பதன் உதாரணமாக பள்ளிகள் திறப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கருத்துக்கு மதிப்புக் கொடுத்து வீண் பிடிவாதம் இல்லாமல் அரசு செயல்பட்டுள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. பொது நோக்கம் மட்டுமே’.
இவ்வாறு அவர் கூறினார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *