சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்-அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்-அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற வரும் 20-ந் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சர்க்கரை -அரிசி அட்டைகள்
பொது விநியோகத் திட்டத்தில் தற்போது 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு முதல்வர், கீழ்க்கண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

20-ந் தேதி வரை அவகாசம்
சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து, இன்று முதல் 20.12.2020 வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை குடும்ப அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *