கண் நோயாளிகளுக்காக ‘புதிய ஆப்’ விரைவில் அறிமுகம்

கண் நோயாளிகளுக்காக ‘புதிய ஆப்’ விரைவில் அறிமுகம்

கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளின் வசதிக்காக புதிய செயலியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கி வருகிறது.

Going for an Eye Checkup? 8 Questions About Transitioning to Contacts |  PerfectLensWorld

இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கண் நோய் சிகிச்சை பிரிவு தலைவர் டிட்டியால் கூறுகையில், “நாடு முழுவதும் உள்ள கண் நோயாளிகள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதற்காக, புதிய ஆப் (செயலி) உருவாக்கப்பட்டு வருகிறது. இது, கண் அறுவை சிகிச்சைக்கு காத்திருந்து நோயாளிகளை தொடர்ந்து கண்டறிந்து அவர்களை தொடர்ந்து கண்காணிக்க உதவும். தொலைதூரத்தில் இருக்கும் நோயாளிகள் எப்பொழுதும் மருத்துவர்களை நேரில் சந்தித்து பேசுவது கடினம்.இந்த ஆப் மூலம் மருத்துவர்கள், நோயாளிகளுடன் நேரிடையாக கலந்துரையாடலாம். இதில் உள்ள கேமரா உதவியுடன் நோயாளிகள் தங்களுடைய கண்களின் படத்தை அனுப்பி தங்களின் பிரச்சனைகள் குறித்து மருத்துவர்களிடம் பேச முடியும். இன்னும் 6 மாதத்தில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *