Saturday, September 19, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

பரிணாம வளர்ச்சியில் கண்களை இழக்கும் கிவி பறவை

July 21, 2020

பரிணாம வளர்ச்சி தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. குரங்கில் இருந்து மனிதன் பல ஆயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்து வந்தான். அதுபோல பூமியில் உயிர்கள் தோன்ற ஆரம்பித்த காலத்தில் இருந்து அனைத்து  உயிரினங்களும் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டேதான் இருக்கின்றன. அவைகளின் தேவைக்கேற்ப உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக நியூசிலாந்து நாட்டை பூர்விகமாகக் கொண்ட உயிரினமான கிவி பறவைகள் தங்கள் கண் பார்வையை இழப்பது தெரியவந்துள்ளது. இது குறைபாடு காரணமாக ஏற்படவில்லை. பரிணாம வளர்ச்சி காரணமாக கிவி பறவைகளுக்கு கண்களின் தேவை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக நல்ல உடல்நிலையுடன் அவை இருப்பதும் தெரிய வந்துள்ளது.
தொட்டு உணர்தல், முகர்தல், கேட்கும்திறன் ஆகியவை மிகச்சிறப்பாக வேலை செய்யும்போது கண்களின் தேவை குறைகிறது. கண்களுக்கு என தனியாக உடல்ஆற்றல் செலவிடப்படுவது இதன் மூலம் குறைக்கப் படுவது பரிணாம வளர்ச்சிக்கான முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
 நியூசிலாந்தின் OKArito   காடுகளில் இருக்கும் 160 கிவி பறவைகளை ஆராய்ந்ததில் மூன்று பறவைகள் கண் பார்வையின்றி இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆரம்பத்தில் இவை குறைபாடுடைய பறவை என்றே விஞ்ஞானிகள் எண்ணியிருந்த நிலையில் அம்மூன்று பறவைகளும் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். பின்னர் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னரே இது பரிணாம வளர்ச்சியினால் ஏற்பட்டது எனும் முடிவுக்கு வந்தனர்.


பரிணாம வளர்ச்சி காரணமாக பார்வையை இழக்கும் முதல் விலங்கினம் கிவி அல்ல. இதற்கு முன்னரே ஒரு சில மீன்கள் உள்ளிட்ட பல உயிரினங்கள் பார்வையை இழந்துள்ளன. இதன் மூலம் உயிர் வாழ்வதற்கு பார்வை இன்றியமையாத தேவையில்லை என்பது உறுதியாவதாக தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள். பரிணாம வளர்ச்சியினால் ஒரு உயிரினத்துக்கு கண்பார்வை இல்லாமல் போவதற்கு காரணமாக அவை எங்கு வாழ்கின்றன, எப்படி வாழ்கின்றன போன்ற சூழ்நிலைகளே முக்கிய காரணிகளாக அமைகின்றன. கிவிக்கள் இரவில் மிகவும் சுறுசுறுப்பாக செயல் படக்கூடியவை. தேவைக்கு ஏற்றார்போல அங்கு உணவும் அவற்றுக்கு எளிதாகக் கிடைக்கின்றன. அவற்றை தாக்கும் வகையான எந்த உயிரினங்களும் அங்கு இல்லை. இதைப் போன்ற காரணங்களால் கண்களின் தேவை அங்கு இல்லாமல் போய்விடுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி

புதிய உச்சத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; $729.3 பில்லியனாக உயர்வு!

ரி – ரீலிஸ்: அமர்க்களம்


Sonic Hedgehog எனப்படும் மரபணுவே இந்த கண் பார்வை இல்லமல் போவதற்கான முக்கிய காரணியாக இருப்பதுடன் இவை கண் பார்வையை பறித்தாலும் தொடுதல், முகர்தல் போன்ற புலன்களை அதிகளவில் ஊக்கப்படுத்துவதும் தெரியவந்துள்ளது. இந்த Okarito கிவி பறவைகளை ஆராய்வதன் மூலம் உயிர்கள் தொடங்கிய காலத்தில் இருந்து கண்பார்வை எவ்வாறெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது. ஆனால் அப்பறவை இனமோ தற்போது அழிவின் விழிம்பில் உள்ளன. அப்பகுதியில் தற்போது மொத்தமே 400 கிவி பறவைகள் தான் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

உலகின் மக்கள் தொகை குறையவுள்ளது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்

Next Post

சென்னையில் மேலும் 18 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு

Next Post

சென்னையில் மேலும் 18 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version