முன்னாள் உலக சாம்பியனை பந்தாடிய நடப்பு உலக சாம்பியன்…

முன்னாள் உலக சாம்பியனை பந்தாடிய நடப்பு உலக சாம்பியன்…
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்று டுவெண்ட்டி 20 தொடரின் இரண்டாம் ஆட்டம் இங்கிலாந்தின் சவுதம்டனில் நேற்று நடந்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்த,ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டு இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 40 ரன்களும், ஸ்டோனிஸ் 35 ரன்களும், மேக்ஸ்வெல் 26 ரன்களும் எடுத்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வார்னர் (0), ஸ்டீவன் சுமித் (10 ரன்) மிகவும் ஏமாற்றம் அளித்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களம் கண்ட இங்கிலாந்து அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டு இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஆட்டம் இழக்காமல் 77 ரன்களும் டேவிட் மலான் 42 ரன்களும், மொயீன் அலி 6 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 13 ரன்களும் (நாட்-அவுட்) விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *