அரியர் தேர்வு குழப்பத்தை நீக்கி தெளிவான விளக்கம் வெளியிட வேண்டும்-தேமுதிக தலைவர் விஜயகாந்த்

அரியர் தேர்வு குழப்பத்தை நீக்கி தெளிவான விளக்கம் வெளியிட வேண்டும்-தேமுதிக தலைவர் விஜயகாந்த்
அரியர் தேர்வு தொடர்பாக குழப்பத்தை நீக்கி தெளிவான விளக்கத்தை வெளியிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கல்லூரி இறுதி பருவம் எழுதும் மாணவர்களை தவிர பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும், அரியர் வைத்த மாணவர்களுக்கும் இது பொருந்தும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால் பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்திருக்கிறார்.

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியிருக்கிறார். அதே உறுதியுடன் அரியர் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய ஆணை வெளியிட வேண்டும். இந்த அரியர் தேர்வு தொடர்பாக தமிழக உயர் கல்வித்துறைக்கும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவிற்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது மாணவர்களிடையே குழப்பதையும்,மனஅழுத்தத்தையும் உண்டாக்கியுள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் முடிவுக்கு கொண்டு வரும் வைக்கும் வகையில் பொறியியல் அரியர் தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு ஒரு தெளிவான விளக்கத்தை வெளியிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்பட்ட குழப்பத்தை நீக்க வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *