பெங்களூரு – டெல்லி அணிகள் இன்றைய போட்டியில் மோதல்… தோல்வியிலிருந்து மீளுமா பெங்களூரு…?

பெங்களூரு – டெல்லி அணிகள் இன்றைய போட்டியில் மோதல்… தோல்வியிலிருந்து மீளுமா பெங்களூரு…?

பெங்களூரு – டெல்லி அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

ஐபிஎல் போட்டியில் டெல்லி, பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள பிரதமர் மோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெங்களூரைப் பொறுத்தவரை சீசன் தொடக்கம் முதல் தோல்வியே சந்திக்காமல் வந்து, கடைசி ஆட்டத்தில் சென்னையிடம் தோற்றது. எனவே, இந்த ஆட்டம் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப அந்த அணி முயற்சிக்கும். பேட்டிங்கில் கோலி – படிக்கல் கூட்டணி நல்லதொரு தொடக்கத்தை அளிக்கிறது. மிடில் ஆா்டரில் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் சிறப்பாகவே விளையாடுகின்றனர். பெங்களூரின் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை.

டெல்லியைப் பொறுத்தவரை, கடைசி 3 ஆட்டங்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் உள்ளது. தொடக்க வீரா்களான பிருத்வி ஷா, தவன் நல்லதொரு பார்மில் உள்ளனர். மிடில் ஆா்டரிலும் கேப்டன் பன்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னிஸ் என வலுவான வீரா்கள் வரிசையில் இருக்கின்றனர். அஸ்வின் இல்லாத நிலையில் பவுலிங்கில் அக்ஸர் படேல், அமித் மிஸ்ரா ஆகியோருக்கான பொறுப்பு அதிகரிக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *