நீங்க என்னைக்கும் பாஸ் தான்..உங்க கையில சிக்குனா எதிரணி பீஸ் தான்…

நீங்க என்னைக்கும் பாஸ் தான்..உங்க கையில சிக்குனா எதிரணி பீஸ் தான்…
கிறிஸ் கெயில் என்று பஞ்சாப் அணியில் விளையாட காலடி எடுத்து வைத்தாரோ அன்று பஞ்சாப் அணியின் வெற்றி தொடர் வெற்றி ஆகிவிட்டது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க ஆட்ட வீரர் மந்தீப் ரன்கள் எதுவுமின்றி வெளியேற,கே.எல்.ராகுலுடன் இணைந்த கிறிஸ் கெயில் ஒரு முனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த,மறுமுனையில் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 46 ரன்களில் வெளியேறினார்.தொடர்ந்து சிறப்பாக ஆடிய கிறிஸ் கெயில் 63 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்தில் கிளீன் போல்டனார்.இதனால்1 ரன்களில் சதத்தின் வாய்ப்பை தவறவிட்டார்.கிறிஸ் கெயில் இதுவரை பஞ்சாப் அணிக்காக பங்கேற்ற 5 ஆட்டங்களிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் கெயில் 2020 ஐ.பி.எல் தொடரில் ஆடிய 6 ஆட்டங்களில் 3 அரை சதங்கள் உள்பட 23 சிக்ஸர்களையும் தெறிக்கவிட்டுள்ளார்.அதுமட்டுமில்லாமல் உலக டி-20 போட்டிகளில் 1000 சிக்ஸர்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் இவரை சார்ந்தது.இதுவரை ஐ.பி.எல் வரலாற்றில் 6 சதம்,31 அரை சதம் மற்றும் 4760 ரன்களையும் எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் 2013 ம் ஆண்டு பெங்களூர் அணியில் புனே வாரியேர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக இவர் அடித்த 175 ரன்கள் சாதனை உலக டி-20 அரங்கில் இதன் பிறகு எவரும் முறியடிப்பது சந்தேகமே…

Chris Gayle explodes…175* off 66 balls creates history to fire RCB to  130-run win – Kaieteur News
author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *