ரியல் வாத்தி கம்மிங்..பட்டையை கிளப்பும் தல தோனி மேஷ்-அப் வீடியோ

ரியல் வாத்தி கம்மிங்..பட்டையை கிளப்பும் தல தோனி மேஷ்-அப் வீடியோ

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலில் தோனியை வைத்து சிஎஸ்கே நிர்வாகம் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக சிஎஸ்கே அணி வீரர்கள் துபாய் சென்றுள்ள நிலையில், ரெய்னா தொடர்பான சர்ச்சை மற்றும் ஹர்பஜன் தொடரில் இருந்து விலகியது போன்ற பல பிரச்னைகளுக்கு மத்தியில் வீரர்கள் மீண்டும் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியாகி முதல் போட்டி மும்பை – சிஎஸ்கே இடையே நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடலை ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தோனியை வைத்து வெளியிட்டு இருக்கின்றனர் .

https://twitter.com/ChennaiIPL/status/1302261770858442753?s=19

விடியோவில், தோனி வலைபயிற்சியில் ஈடுபடுவது, விளம்பரங்களில் நடித்தது போன்ற பல்வேறு அதிரடி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரியல் வாத்தியின் என்ட்ரீ இதுதான், சிஎஸ்கே மற்றும் தோனியின் ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *