இலங்கை 6வது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றியது

இலங்கை 6வது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றியது

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி  இலங்கை 6வது முறையாக ஆசிய  கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Image

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய  பானுகா ராஜபக்ச 71 ரன்களை குவித்தார். ஹசரங்கா டி சில்வா 36 ரன்களும், தனஞ்செய டி சில்வா 28 ரன்களும் குவித்தனர்.

Image
Image

இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. முகமது ரிஸ்வான் மட்டும் அரைசதம் அடித்தார். இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 6 வது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றி இலங்கை சாதனை படைத்துள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *